சர்ச்சை நடிகை வைல்ட் கார்டில் பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சி போன சீசனைப் போல் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. 55 நாட்களைக் கடந்தும் பெரிதாக ஈர்க்காத இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உண்மையான முகம் இன்னும் வெளிப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த சீசனில் பிந்து மாதவி, ஹரீஸ் கல்யாண், சுஜா வருணி, காஜல் பசுபதி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றனர். அதே போல் இந்த சீசனில் எப்போது புது போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள், யார் வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் பொன்னம்பலம், சென்ட்ராயன், ஜனனி ஆகியோர் இருக்கிறார்கள். யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் எகிறியிருகிறது. தற்போது வந்துள்ள செய்திகளின் இந்த வார எலிமினேஷன் முடிந்த பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கிறதாம். உள்ளே போகும் பிரபலம் யார் தெரியுமா, சர்ச்சைகளுக்குப் பெயர் போன நடிகை கஸ்தூரி.

அரசியல், சினிமா, சமூகப் பிரச்னை தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல்மீடியாக்களில் கருத்துக்களைத் தெரிவித்து, ஆக்டிவாக இருப்பவர் கஸ்தூரி. இதனால், பல சர்ச்சைகள் ஏற்பட்டு அவர் பிசியாக, இன்னும் துடிப்புடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்போதும் ஸ்டாராக வலம்வரும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்கு வருவாரா? காத்திருப்போம் இன்று இரவு வரை…

Sharing is caring!