சர்ச்சை… புகைப்பிடிப்பது போன்ற படம் வெளியிட்ட அமலாபால்

சென்னை:
புகைப் பிடிப்பது போன்ற படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி உள்ளார் நடிகை அமலாபால்.

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வந்த ராட்ஸ்சன் படம் ஹிட்டாகிவிட்டது. அடுத்ததாக அவருக்கு அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் தயாராகிவருகிறது.

ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடை விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் தற்போது புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை அதிகம் பேர் லைக் செய்திருந்தாலும்… பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!