சர்வம் தாளமயம் படத்தில் இசையமைத்துள்ள ராஜீவ் மேனன்

சென்னை:
சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார் ராஜீவ் மேனன்.

ரிலீ­சுக்கு முன்பே டோக்­கியோ சர்­வ­தேச திரைப்­பட விழா­வில்
திரை­யி­டப்­பட்டு பாராட்­டு­க்க­ளைக் குவித்த படம் சர்­வம் தாள­ம­யம். மைண்ட் ஸ்கிரீன் சினி­மாஸ் தயா­ரிப்­பில் இயக்­கு­நர் ராஜீவ் மே­னன் இயக்­கத்­தில் ஜி.வி. பிர­காஷ் நடிக்­கும் இந்த படத்­துக்கு
ஏ.ஆர். ரஹ்­மான் இசை­ய­மைத்­துள்­ளார்.

ரவி­யா­த­வின் கேம­ரா­வுக்கு ஆண்­டனி எடிட்­டிங் செய்­துள்­ளார். இந்த படத்­தின் பாடல்­களை நா. முத்­துக்­கு­மார், மதன் கார்கி, அருண்­ராஜா ஆகி­யோர் எழு­தி­யுள்­ள­னர்.

டைரக்சனு­டன் சேர்த்து பாடல் ஒன்­றுக்கு ராஜீவ் மே­னன்
இசை­ய­மைக்கவும் செய்துள்ளார். மதன் கார்கி வரி­க­ளில் ஸ்ரீராம் பார்த்­த­சா­ரதி பாடிய வர­லாமா என்ற பாட­லுக்கு அவர்
இசை­ய­மைத்­துள்­ளார். அபர்ணா பால­மு­ரளி, நெடு­முடி வேணு, வினீத் உட்­பட பலர் நடித்­துள்­ள­னர்.

மேலும், தனக்கு நெருக்­க­மான நண்­பர்­க­ளுக்­கும் படத்­தைத்
திரை­யிட்­டுக் காட்டி வரு­கி­றார் ராஜீவ் மேனன். முன்­னணி இந்­திய கிரிக்­கெட் வீரர் கும்ப்ளே, இயக்­கு­நர் பாலா, ஒளிப்­ப­தி­வா­ளர் பி.சி. ஸ்ரீராம் உட்­பட பல­ரும் இப்­ப­டத்­தைப் பார்த்து பாராட்­டி­யுள்­ள­னர். படம் வரும்  28-ம் தேதி­யன்று திரைக்கு வரும் என ஏற்­கெ­னவே
படக்­குழு அறி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!