‘சர்வம் தாள மயம்’ விரைவில் ரீசர்

‘மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில் இசை மற்றும் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.

இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பார்த்துவிட்டாராம். அதோடு ஜிவி பிரகாஷுக்கு இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று பாராட்டியிருக்கிறார். “சர்வம் தாள மயம்’ படத்தைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைதத்து. படத்தை மிகவும் ரசித்தேன். ஒரு இசைப் படத்திற்கான சான்றாக இந்தப் படம் இருக்கும். கண்டிப்பாக பிளாக் பஸ்டர்தான். என் நண்பனுக்கு இப்படி ஒரு படம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த படம், உங்கள் நடிப்பை நேசித்தேன் ஜிவி,” எனப் பாராட்டியிருக்கிறார்.

Sharing is caring!