சற்று நேரத்தில் வெளியாகும் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் அறிவிப்பு.. !!

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

இதற்கான ப்ரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு “பிக்” அறிவிப்பை வெளியிட உள்ளதாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் குறித்த அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன், லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. அதற்கு நடிகர் லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

Sharing is caring!