சாக்லெட் பாய் மாதவனா இது? சாமியார் போல் தாடியுடன்!

சென்னை:
சாக்லெட் பாயாக இருந்த மாதவனா இது என்று அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மேடி என்று அழைக்கப்படுபவர் மாதவன். இவர் மிகவும் யோசித்து தான் ஒரு படத்தில் கமிட் ஆகிறார். அந்த விதத்தில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களும் இவர் நடிப்பில் செம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நீண்ட தாடியுடன் சாமியார் போல் இருக்க, அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதில் மாதவனை பார்த்த பலரும் என்ன சாக்லெட் பாய்  மேடி இப்படி மாறிவிட்டார் என ஷாக் ஆகி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!