சாக்லேட் பாயாக வலம் வந்த ஸ்ரீகாந்த் ஹன்சிகா படத்தில் வில்லனா?

சென்னை:
சாக்லேட் பாய் ஆக கோலிவுட்டில் வலம் வந்த ஸ்ரீகாந்த் தற்போது வில்லனாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். ஆனால், ஒரு சில படங்களின் தோல்வி இவரை மிகவும் பின்னுக்கு தள்ளியது.
ஆரம்பத்தில் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்.

ஆனால் சில தவறான படத்தேர்வால் இவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது, நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பன் படம் மட்டுமே இவருக்கு கொஞ்சம் கைக்கொடுத்தது.

அதன் பிறகும் இவரால் ஜொலிக்க முடியவில்லை, தற்போது இவர் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடிக்கும் மஹா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!