சாதனை படைக்குமா 2.0?

ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்றான 2.O திரைப்படம் உலகெங்கிலும் ஏறக்குறைய 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதற்கு முன்பு திரைப்பட வசூலில் சாதனை படைத்த பல முன்னணி இந்திய திரைப்படங்களின் சாதனையை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுரை அதியுயர் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாக இது அமைந்துள்ளதுடன், 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இப்படத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் இந்த திரைப்படம் வெளியிடப்படுவதுடன் திரையிடுவதற்கு முன்பாக 120 கோடி ரூபாவை முன்பதிவுகளில் திரட்டியுள்ளது.

2.O திரைப்படம் உலகெங்கிலும் ஏறக்குறைய 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.

Sharing is caring!