சாதி பேசும் காலம் முடிந்துவிட்டது : கமல்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், கருணாஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்தாவது, சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்ட நேரத்தில் விளையாட்டுக்கு கூட சாதியை பற்றி பேசக்கூடாது. அந்தக்காலம் முடிந்துவிட்டது. கருணாஸ் மன்னிப்பு கேட்டதாக கேள்விப்பட்டேன், அது நியாயமானது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆயத்தமாகவில்லை. தேர்தல் அறிவிப்பு வரட்டும். ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆதாரத்தோடு வெளியிட்டாலும் தப்பித்து விடுகிறார்கள். ஊழல் செய்பவர்களை ஒழிக்க வேண்டும் என்பதே என் கருத்து.

The Iorn lady படம் அதிமுக.,வினருக்காக படம் தயாரிக்கப்படுகிறது. அவரால் பலன் அடைந்தவர்கள் தயாரிக்கிறார்கள். இதுப்பற்றி கருத்து தெரிவிக்க முடியாது

Sharing is caring!