சாந்தனுவுக்கு வாழ்த்து கூறிய விஜய்

சாந்தனு ஹீரோவாக நடிக்க உள்ள ராவண கோட்டம் திரைப்படம் பூஜையுடன்  இன்று துவங்கியுள்ளது. இந்த தகவலை புகைப்படங்களுடன்   சாந்தனு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து ட்விட் செய்துள்ள விஜய் டைட்டில் செம , வாழ்த்துக்கள் நண்பா என பதிவிட்டுள்ளார்.

சாந்தனு ஹீரோவாக நடிக்க உள்ள அடுத்த படத்திற்கான தலைப்பு ‘ராவண கோட்டம்’. இந்த திரைப்படத்தை  ‘மதயானைக் கூட்டம்’திரைப்படத்தின் இயக்குனர்விக்ரம் சுகுமாரன் நீண்ட இடைவேளைக்கு இயக்குகிறார்.மதயானைக் கூட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘ராவண கோட்டம்’  திரைப்படத்தை  கண்ணன் ரவி தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.இந்நிலையில் இந்த படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இது குறித்து சாந்தனுவிற்கு வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Sharing is caring!