சாமி 2 பாடல் வௌியீடு இன்று

விக்ரமின் ‘சாமி 2’ பட பாடல்கள் வெளியீட்டு விழா, இன்று (ஜூலை23) நடக்கிறது.

நாயகன் விக்ரம், இயக்குநர் ஹரி மீண்டும் கூட்டணி போட்டு  ’சாமி 2’ படத்தை உருவாக்கி உள்ளனர். 15 வருடங்களுக்கு பிறகு ’சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் அப்பா -மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் விக்ரம்!

இதில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் விக்ரமின் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். மேலும் பாபி சிம்ஹா, பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார், படத்தை தமீன்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
‘சாமி 2 ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான ‘மொளகாப்பொடியே…’ என்கிற சிங்கிள் ட்ராக் லிரிக்கல் வீடியோ ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ’சாமி 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று இரவு கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது. இந்த விழாவில் நாயகன் விக்ரம், நாயகிகள் கீர்த்தி சுரேஷ், ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

Sharing is caring!