சாய்பல்லவியின் மாரி2 வெற்றிபெறுமா?

பிரேமம் படத்தில் நடித்து பிரபலமானவரான சாய் பல்லவி, அதையடுத்து பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்த படம் வெற்றிபெறாததால் தமிழில் சாய்பல்லவிக்கு பெரிய என்ட்ரி அமையவில்லை.

இருப்பினும் தற்போது தனுசுடன் நடித்துள்ள மாரி-2 படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் அராத்து ஆனந்தி என்ற ஆட்டோ டிரைவராக நடித்துள்ள சாய்பல்லவி, ரொமான்ஸ், காமெடி என்று கலக்கி எடுத்திருக்கிறாராம்.

அதோடு, இந்த படம் தெலுங்கிலும் டிசம்பர் 21-ந்தேதி வெளியாகிறது. சாய்பல்லவிக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவரை முன்னிறுத்தி விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறதாம். இதனால் தனுஷின் மாரி-2 சாய்பல்லவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Sharing is caring!