சினிமாவில் வாய்ப்பு தருவதாக தன்னை பயன்படுத்தியதாக ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு

ஷசினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா பிரபலங்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாகவும், ஆனால் வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களின் பெயரை பட்டியலிட்டார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை கோரி வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதில், பாலியல் தொழில் செய்தல், பணம் பறிக்கும் முயற்சி, பெண்களுக்கு இழிவை ஏற்படுத்துவது, சமுதாய சீர்கேடு உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

வாராகி பதிலடி கொடுக்கும் விதமாக, அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்கள் தகுதியானவர் தான். மலிவான விளம்பரம் தேட வேண்டாம் என பேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தன்னை பற்றி இழிவாக பேசிய வாராகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரெட்டியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி : பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்துள்ளேன். எல்லோருக்கும் நான் பேட்டி கொடுப்பது, இனி இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான். விஷாலும், கார்த்தியும் எனது புகாரை முறையாக அணுகவில்லை.

வாராகி என்பவர் யார்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்ல அவர் யார்.?, அதற்கு ஆதாரம் வைத்திருக்கிறாரா.?, சமூக சேவகர் என்று சொல்லும் அவர் பெண்களை முதலில் மதிக்க கற்று கொள்ள வேண்டும். பெண்களுக்கு தர வேண்டிய மரியாதையை எனக்கு தரவில்லை. அவர் மீது புகார் கொடுத்துள்ளேன்.

என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் போன்றவர்கள் எல்லாம் எனக்கு பணம் கொடுத்தார்களா.? பின்னர் எப்படி நான் பாலியல் தொழில் செய்தேன் என என் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறார் வாராகி. இல்லை அவர்களுக்கு பதில் இவர் பணம் கொடுத்தாரா.?

என்ன வேண்டும் அவருக்கு.?, இல்லை என்னுடைய ரூமுக்கு வர வேண்டும் என நினைக்கிறாரா.? பாதிக்கப்பட்டவள் நான், எனக்கு எதிரான வராகியின் புகார் மிகவும் கீழ்த்தரமானது. இதுபோன்ற ஆட்கள் எல்லாம் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக கூட இருக்க கூடாது.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Sharing is caring!