சின்னத்திரையில் என்ட்ரியாகும் சுருதி

கமல் சின்னத்திரையில் என்ட்ரியாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவரை தொடர்ந்து விஷால், வரலட்சுமி, பிரசன்னா போன்ற நடிகர்களும் சின்னத்திரையில் என்ட்ரியாகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த பட்டியலில் கமலின் வாரிசும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கான டைட்டில் பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். பாணா காத்தாடி பட இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

Sharing is caring!