சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ராதாரவி

சென்னை:
சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ராதா ரவி தற்போது டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அவர் சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளாராம்.

வரும் ஜனவரி 26 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 4 அணிகள் போட்டியிடுகிறார்களாம். 1200 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தற்போது நடிகர் போஸ் வெங்கட் செயலாளராக இருக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!