சின்னத்திரை நடிகர் வினோத் பாபு திடீர் திருமணம்.. குழம்பி போன ரசிகர்கள்.!!

வெள்ளித்திரைகளை விட, சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்த புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்புகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க நானும். குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வினோத் பாபு அவர்களுக்கு திடீரென்று தற்போது திருமணம் நடந்து உள்ளது.

மேலும், வயலூர் கோவிலில் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், இவருடைய மனைவி விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஏன் இந்த திடீர் திருமணம் என்று சின்னத்திரை வட்டாரங்களிலும் கேள்விகள் எழுந்து வந்தன.

இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் நடிகர் வினோத் பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!