சின்னத்திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி 360 டிகிரி 3டி வீடியோ வெளியீடு

சென்னை:
சின்னத்திரை ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்றால் அது பிக்பாஸ் 2 நிகழ்ச்சி என்றால் மிகையில்லை.

பிக்பாஸ் வீட்டில் இன்று என்ன நடந்தது என்பது பற்றித்தான் தற்போது பலரின் பேச்சும் உள்ளது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ரசிகர்களை ஈர்த்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பிரத்யேகமான வீடு போன்ற செட் போடப்பட்டு வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பில்லாமல் 100 நாட்கள் இருக்கவேண்டும்.

இந்த வீட்டுக்குள் எப்படியாவது சென்று பார்க்கவேண்டும் என ரசிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது. அதை ஓரளவுக்கு நிறைவேற்றும் விதத்தில் ஒரு 360 டிகிரி 3D விடியோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!