சின்மயிக்கு டாப்ஸி ஆதரவு குரல்

சென்னை:
இன்னும் முடியவில்லை… அதிகாரத்தில் இருபவர்கள் இப்படித்தான் பழிவாங்குவார்கள என்று சின்மயிக்கு ஆதரவு குரல் எழுந்துள்ளது.
வைரமுத்து மீது பகிரங்கமாக பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி.

இவர் தமிழ் சினிமாவின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இனி சின்மயி சினிமாவில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனையில் சின்மயிக்கு நடிகை டாப்ஸி ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். “இன்னும் முடியவில்லை.. அதிகாரத்தில் இருபவர்கள் இப்படித்தான் பழிவாங்குவார்கள்” என அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!