சின்மயி நீக்கத்திற்கு தடை விதித்தது நீதிமன்று

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திரைத்துறையிலிருந்து ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரைப்படங்களில் டப்பிங் பணிகளிலும் சின்மயி ஈடுபட்டிருந்த நிலையில், டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார். எந்த முன்னறிவிப்புமின்றி , அதன் தலைவர் ராதாரவி, வேண்டுமென்றே தன்னை நீக்கியதாக சின்மயி குற்றம் சாட்டினார்.

சரிவர சந்தாவை சின்மயி கட்டாததால் அவரை நீக்கியுள்ளதாக சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்கு தொடுத்திருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பான விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. டப்பிங் சங்க தலைவர் ராதாரவி, இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!