சிம்டாங்காரனை பாராட்டிய த்ரிஷா

விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான, ஆளப்போறான் தமிழன் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த நிலையில், தற்போது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் லிரீக்கல் வீடியோவை வெளியிடப்பட்டுள்ளனர்.

இந்தப்பாடல் என்ன மொழி என்றே புரியவில்லை என விமர்சனங்கள் வந்தாலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் பல படங்களில் நாயகியாக நடித்த, த்ரிஷாவும் இந்த சிம்டாங்காரன் பாடலைப் பற்றி டுவிட்டரில், எப்பவும் போல இதுவும் சூப்பர் என்று ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

Sharing is caring!