சிம்பா ஹீரோ வருத்தம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் சிம்பா. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பானு மெஹ்ரா, ஸ்வாதி தீக்ஷித், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் ஸ்டோனர் வகை திரைப்படம். தமிழில் முதன் முதலாக வந்திருக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையானர்கள் அடிக்கும் லூட்டிகளும் அதனால் ஏற்படும் காமெடி கலந்த சம்பவங்களுமே ஸ்டோனர் திரைப்படங்கள் என்று அழைக்கப்படும். இதில் பிரேம்ஜி அமரன் சிம்பா என்ற நாய்குட்டியாக நடித்திருக்கிறார். வித்தியாசமான இந்த முயற்சிக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆனால் படம் குறைந்த தியேட்டர்களிலேயே வெளிவந்தது. அதிலும் குறிப்பாக பல தியேட்டர்களில் காலை மற்றும் இரவு காட்சிகளை திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் சில நகரங்களில் வெளிவரவே இல்லை. படத்திற்கு போதிய விளம்பரமும் இல்லை. இதனால் படம் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பிடத்தகுந்த படத்தில் படத்தில் நடித்திருக்கும் பரத் இதனால் வருத்தம் அடைந்துள்ளார். “என் கேரியரில் இது முக்கியமான படம். வித்தியாசமான தமிழுக்கு புதுமையான படம் என்பதால் விரும்பி நடித்தேன். படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் முறையாக வெளியிடுவதும், விளம்பரம் செய்வதும் தயாரிப்பாளரின் பணி. இதில் நான் வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை” என்கிறார் பரத்.

Sharing is caring!