சிம்புதேவன் இயக்கத்தில் ஆறு கதாநாயகர்கள்

விஜய் நடித்த புலி படத்தை அடுத்து ஏற்கனவே தான் இயக்கிய இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து இயக்கினார் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு, சிம்புதேவனுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.

அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதனால் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஒரு படத்தை தற்போது இயக்கி வருகிறார் சிம்பு தேவன். இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களான ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சென்னை-28 விஜயலட்சுமியும் நடிக்கிறார்.

இந்த படத்தில் மொத்தம் 6 கதைகள் உள்ளதாம். அந்த 6 கதைகளிலும் ஒவ்வொரு ஹீரோ நடிக்கிறார்களாம். இதுகுறித்த தகவல்கள் மற்றும் படத்தின் டைட்டீல் விரைவில் வெளியாக உள்ளது.

Sharing is caring!