சிம்புவிற்கு மீண்டும் கோர்ட் எச்சரிக்கை

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் ஒரு வெற்றியை ருசித்துள்ளார் நடிகர் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் அவரும் நடித்திருந்த செக்கச் சிவந்த வானம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுந்தர் சியின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, பேஷன் மூவி மேக்கர்ஸ் என்று நிறுவனம், சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்து, ரூ.50 லட்சம் பணத்தை அட்வான்ஸாக கொடுத்தது. சிம்பு இதுநாள்வரை இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, தனக்கு சேர வேண்டிய படத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே சிம்பு பணத்தை திருப்பி தர உத்தரவாதம் அளிக்க வேண்டும், இல்லையேல் சிம்புவின் கார், செல்போன் போன்றவை ஜப்தி செய்யப்படும் என கோர்ட் எச்சரித்து, நான்கு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி சிம்பு செய்யவில்லை.

இந்த வழக்கு இன்று(அக்., 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்., 31-ம் தேதிக்குள், பேஷன் மூவி நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.85 லட்சம் பணத்தை திருப்பி தர, சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல், அவரின் வீட்டு உபயோக பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Sharing is caring!