சிம்பு, கமலின் பேரன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் முதலில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின். அதன்பிறகு காஜல்அகர்வால் நடிப்பதாக கூறப்பட்டது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில், தற்போது அப்படத்தில் சிம்பு, கமலின் பேரனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் காஜல்அகர்வாலை கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். அப்படியென்றால் கமல் அவருக்கு தாத்தாவாகும்போது

காஜல்அகர்வால், பாட்டியாகி விடுவாரல்லவா. இதை சொல்லித்தான் காஜலை கிண்டல் செய்கிறார்கள் ரசிகர்கள்.

அதோடு, இதனால்தான் நயன்தாரா, இந்தியன்-2 படத்தில் இருந்து எஸ் ஆகியிருக்கிறார் என்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Sharing is caring!