சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார்

நடிகர் சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார்.

2008ஆம் சீமான் இயக்கத்தில் வெளியாகிய ‘வாழ்த்துகள்’ படத்தின் பின்னர் திரையுலகில் படம் இயக்கும் பணியிலிருந்து விலகியிருந்த சீமான், சிம்புவை வைத்து படம் இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மேடைப் பேச்சொன்றில் சிம்புவை புகழ்ந்து பேசியுள்ளார்.

சிலம்பரசன் தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். எல்லோரிடமும் கதையைக் கூறினேன். மறுத்துவிட்டார்கள். ஆனால், தம்பி சிம்பு மட்டும் தான் நடிக்கிறேன் அண்ணா எனக் கூறினார். என்னுடைய பேச்சை விட தீபாவளிக்கு வரவிருக்கின்ற எனது படம் அதிகமாகப் பேசும்.

அச்சமில்லாத, துணிவான, நேர்மையான தம்பி சிலம்பரசன் தான், அடுத்த சூப்பர் ஸ்டார் என, சிம்புவைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அண்மையில் சென்னையில் இடம்பெற்ற குறுந்தகடு வௌியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நடிகர் சிம்பு பற்றி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!