சிம்பு திருமணம்…..நடித்த பெண்ணா? பிடித்த பெண்ணா?

நடிகர் சிம்புவுக்கு அவருடன் இணைந்து நடித்த பெண்ணைவிட அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துவைக்க விரும்புவதாக அவரின் தந்தை டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இளைய மகன் குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபலங்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த இராஜேந்திரன், சிம்புவின் திருமணம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு பொருத்தமான ஜாதகம் பொருந்திய பெண்ணை பார்த்து வருவதாகவும் விரைவில் இறைவன் அருளால் அவருக்கு பெண் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணம் தாமதம் ஆவதால் தன்னுடைய தம்பி, தங்கைகளின் திருமணம் தடைபட வேண்டாம் என்ற எண்ணம் உடையவர் சிம்பு என்றும் அதனால் தனது தங்கை, தம்பிக்கு திருமணம் என்றதும் அவர் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாரென்றும் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிம்புவின் நல்ல பண்பான மனதுக்கு விரைவில் நல்ல பெண் கிடைப்பார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!