சிம்பு படத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சி… பொங்குகிறார் டி.ஆர்.,

சென்னை:
போலி ஆவணம் மூலம் விற்க பார்க்கிறாங்க… பார்க்கிறாங்க என்று சிம்புவின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். என்ன விஷயம் என்கிறீர்களா?

சிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயற்சி நடப்பதாக கூறி அவரது தந்தை டிஆர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மன்மதன் படத்தின் உரிமை சிம்பு சினி ஆர்ட்ஸ் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அது தனக்கு சொந்தம் என தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறி பிளாக் மெயில் செய்கிறார். அவரது தூண்டுதலின் பேரின் எஸ்என் மீடியா சஞ்சய் லால்வானி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து மன்மதன் பட உரிமை தனக்கு சொந்தம் என கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!