சிம்பு படம் பற்றி ஒரு வாரத்தில் சூப்பர் செய்தி வருதாம்

சென்னை:
இன்னும் ஒரே வாரத்தில் சூப்பர் செய்தி வரும் கவலைப்படாதீர்கள் என்று சிம்பு படம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநாடு என்ற படத்திலும் சிம்பு கமிட் ஆனார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை, அதனால் ரசிகர்கள் செம்ம கோபத்தில் இருந்தனர்.

ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு டுவிட் போட்டு கேட்க, இன்னும் ஒரே வாரத்தில் சூப்பர் செய்தி வரும் கவலைப்படாதீர்கள் என கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!