சிறப்பு காட்சி நடத்திய தியேட்டர்களுக்கு அபராதம்… அமைச்சர் தகவல்

தூத்துக்குடி:
சிறப்பு காட்சி நடத்திய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

சிறப்பு காட்சி நடத்திய சினிமா தியேட்டர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொங்கலுக்கு வெளியான படங்களுக்கு சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதனை மீறி செயல்பட்ட தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தியேட்டர்களில், உணவு பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு பொருட்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!