‘சிறுத்தை’ சிவாவுடன் கைகோர்க்கும் சூர்யா

சூர்யாவின் 39 படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ திரைப்படங்களின் பணிகளை முடித்துள்ள சூர்யா, தற்போது சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சூர்யாவின் 39 திரைப்படத்தை ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, இயக்கவுள்ளார். மேலும்  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படம் குறித்து ட்விட்டில் பதிவு செய்துள்ளது ஸ்டூடியோ க்ரீன்.

இப்படம் குறித்த கூடுதல் தகவல் பின்னர் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் அடுத்தடுத்த படம் குறித்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

Sharing is caring!