சில்க் ஸ்மிதா மாதிரி பெண் வேண்டும் – பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், அடுத்ததாக இயக்கப் போகும் படத்திற்கு சில்க் மாதிரி பெண்ணைத் தேடி வருகிறார்.

எதையுமே மாறுபட்ட கோணத்தில் அணுகி, மற்றவர்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக  சிந்தித்து, தனித்த அடையாளத்துடன் இருக்கும் பார்த்திபனையும் விட்டு வைக்கவில்லை, தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் ‘இரண்டாம் பாகம்’ மோகம்!

1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்த ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் தீவிரத்தில் இருக்கிறார் பார்த்திபன். இதற்கான கதையை தயார் செய்து, தயாரிப்பாளரையும் பிடித்துவிட்டார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திரக் கலைவிழாவுக்கு போன பார்த்திபன், அங்கேயே ஒரு தயாரிப்பாளரையும் பிடித்து திரும்பியுள்ளார்.


இப்போது நட்சத்திர தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். ‘உள்ளே வெளியே 2’ ஆம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார்.

இதற்காக  தனது ட்விட்டரில் அவர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். “2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதியான -வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியில்  சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை” என தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறார்.

Sharing is caring!