சில்க் ஸ்மிதா வெப்சிரீஸ் தமிழில் தயாராகிறது

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாகத் தயாரிக்க இயக்குநர் பா.இரஞ்சித் முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் தவிர்க்க முடியாத பெயர் சில்க் ஸ்மிதா. ரஜினி-கமல் காலக்கட்டத்தில் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தவர் இவர்.விஜயலட்சுமி என்பதுதான் சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர். ஆந்திராவைச் சேர்ந்த இவர் மலையாளப் படங்களில் தொடங்கி, குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தார். ஓரிரு இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியாகி வசூல் கொட்டி தீர்த்து. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிதிருந்தார். ஆனால்  அப்படம் சில சிக்கல் மற்றும் சர்ச்சையிலிருந்து மீண்டு வெளியாகி பின் பெரிய வெற்றிப்பெற்றது. அது மட்டும் இல்லாமல், இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்துள்ள பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்த வெப் சீரிஸைத் தயாரிக்கிறது. இந்த தொடர் சில்க் ஸ்மிதாவின் அனைத்து முகங்களையும் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!