சிவகாமியின் வாழ்க்கை நெட்பிளிக்சில் வெளியாக இருக்கிறது

உலகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்திய சினிமா பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றது. பெரிய வசூலையும் கொடுத்தது. இந்த படத்தில் பாகுபலி கேரக்டருக்கு இணையாக பேசப்பட்ட கதாபாத்திரம் சிவகாமி.

மகிழ்மதி தேசத்தின் ராஜாமாதாவாகத்தான் சிவகாமி கேரக்டர் அறிமுகம் ஆகும். அவர் எப்படி ராஜாமாதா ஆனார். அவரது பூர்வீகம் எது. பாகுபலியை அவர் தத்தெடுத்து வளர்த்தது ஏன்? பாகுபலியின் உண்மையான அப்பா, அம்மா யார் என்பதை மையமாக வைத்து ஆனந்த நீலகண்டன் என்ற எழுத்தாளர் நாவலாக எழுதி உள்ளார்.

அந்த நாவலை மையமாக வைத்து சிவகாமியின் வாழ்க்கை நெட்பிளிக்சில் வெளியாக இருக்கிறது. சிவகாமியின் சிறுவயது முதல் அவர் ராஜமாதாவாகி நாட்டை சிறப்பாக ஆள்வது வரை கதை இருக்கும்.

இதில் சிவகாமியாக மிருணாஸ் தாக்கூர் நடிக்கிறார் நாசர் நடித்த கேரக்டரில் விஸ்வரூபம் வில்லன் ராகுல் போஸ் நடிக்கிறார். இவர்கள் தவிர அதுல் குல்கர்னி, வக்கார் ஷேக், ஜலீல்கான், சித்தார்த் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Sharing is caring!