சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு செம வருமானம்

சென்னை:
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தை கர்நாடகாவில் Al பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 1.17 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இப்பட டிரைலர் வெளியாக ரஜினியின் மன்னன் படம் போல் கொஞ்சம் உள்ளது என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.

ரிலீஸிற்கு தயாராகிவரும் நிலையில் படம் குறித்து ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தை கர்நாடகாவில் Al பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 1.17 கோடி கொடுத்து படத்தை வாங்கியுள்ளார்களாம்.

இதற்கு முன் அங்கு வெளியான சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!