சிவகார்த்திகேயனுக்கு எவர்கிரீன் ஹீரோ பட்டம் கொடுத்த தாணு

சென்னை:
ரஜினிக்கு கொடுத்தது போல் சிவகார்த்திகேயனுக்கும் பட்டம் கொடுத்து அசத்தி உள்ளார் தயாரிப்பாளர் தாணு.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சிறந்த பாடலாசிரியர் என்று கோலமாவு கோகிலா படத்திற்காக ஒரு விருதை பெற்றார்.

அந்த விருதை கலைப்புலி தாணு அளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தீர்கள், அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு தாணு எவர்க்ரீன் ஹீரோ என்று புதிய பட்டம் கொடுத்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!