சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத்

சென்னை:
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமராஜா படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு அடுத்ததாக சின்னத்திரை நடிகர் ரியோவை வைத்து படமொன்றை தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ள அனைவரது பெயர்களையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில் தமிழக அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் பெயரும் உள்ளது.

நாஞ்சில் சம்பத் ஆர்.ஜே.பாலாஜியின் LKG படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!