சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்த ஹீரோ யார்?

நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவரின் நண்பரான அருண்ராஜா காமராஜ் இதனை இயக்க, ஐஸ்வர்யா ராஜேஸும், சத்யராஜும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்போடு ஒரு பாடலை பாடியும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்து நண்பருக்கு ஆதரவளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் தன் மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.

அப்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப் படம் பற்றிய தகவலையும் வெளியிட்டார். பிரபல யூ ட்யூப் சேனல் குழுவினர் இயக்கும் படத்தினை சிவா தயாரிக்கிறாராம். ஹீரோ யார் தெரியுமா? வி.ஜே – வாக இருந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ தான்.

Sharing is caring!