சிவகார்த்திகேயன் தயாரிப்பு அடுத்த படத்தின் அப்டேட்

சென்னை:
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் அடுத்து மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது.

இவர் படம் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பு வேலைகளிலும் இறங்கிவிட்டார், அப்படி இவர் தயாரித்த முதல் படமான கனா செம்ம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று பல விருதுகளை வாங்கியது.

இந்நிலையில் இவர் ரியோ நடிப்பில் ஸ்மைல்சேட்டை கார்த்தி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்தார், அந்த படம் முடிந்து தற்போது டப்பிங் வரை வந்துவிட்டதாம்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!