சிவகார்த்திகேயன் தயாரிப்பு படத்தின் தலைப்பை வெளியீடு

சென்னை:
புதுசு, புதுசா யோசிக்கிறாங்க… சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வீடியோ வடிவில் படக்குழு வெளியிட்டது. அதனை விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் வடிவமைத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!