சிவகார்த்திகேயன் படத்திற்கு டைட்டில்….வாத்தியார் பாடல் வரி

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம், தயாரித்து வரும் புரொடக்சன் 2 படத்திற்கு எம்ஜிஆர் பாடலான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படதிற்கான கதையையும், டைட்டில் வைப்பதில் இருந்த சிக்கல்களையும் ஒரு கதையாக ‘பிளாக் ஷீப்’ டீமின் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் சொல்வதுபோல, இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோ உள்ளது.

சின்னத்திரை ஹீரோ ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கிவருகிறது. ‘கனா’ படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். மேலும் ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார்,. இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள படத்திற்கான டைட்டில் அறிவிப்பு வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sharing is caring!