சிவகார்த்தியின் படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றி நிறுவனம்

சென்னை:
சிவகார்த்திகேயனின் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்,

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!