சிவகார்த்தி படத்திற்கு முதல்முறையாக ஜாயின்ட் ஆன ஹிப்ஹாப் ஆதி

சென்னை:
சிவகார்த்திகேயன் படத்தில் முதல்முறையாக இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோரது படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கிவரும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!