சீதக்காதியின் தமிழ்நாட்டு உரிமத்தை டிரைய்டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம்

விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை தந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்தப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்கி உள்ள படம் சீதக்காதி. விஜய் சேதுபதி முதிர்ந்த நாடக கலைஞராக நடித்துள்ளார். அவருடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி மகேந்திரன், மவுலி, ராஜ்குமார், பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார், சரகாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் வருகிற நவம்பர் 15ந் தேதி வெளிவருகிறது. படத்தின் ஏரியா விற்பனை ஆரம்பமானது. விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை வாங்கிய டிரைய்டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சீதக்காதியையும் வாங்கி உள்ளது. இதுகுறித்து டிரைய்டெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் கூறியதாவது:

விஜய் சேதுபதியும், நானும் இணைந்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும். பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் செய்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக உலகளாவிய பார்வையாளர்களால் பாராட்டப்படும். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுவது ஒட்டுமொத்த திரையுலகில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். என்றார்.

Sharing is caring!