சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய் சேதுபதி

சென்னை:
யுவன் சங்கர் ராஜா தயாரிக்க சீனுராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி வருடத்திற்கு அதிகமான படங்களில் நடித்து வருபவர். பல படங்களில் அவர் கமிட்டாகி உள்ளார். சமீபத்தில் இவரும், திரிஷாவும் இணைந்து நடித்த 96 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் அவர் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!