சீனு ராமசாமியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு

சென்னை:
பாராட்டுக்களை குவித்து வரும் கண்ணே கலைமானே படத்தை அடுத்து சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படம் பற்றி தெரிய வந்துள்ளது.

கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, சர்ஜூன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டார்.

தற்போது விக்ரம் ஸ்ரீதரன் இயக்க அஷோக் செல்வன் நடிக்கும் ரெட் ரம்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டைம்லைன் சினிமாஸின் மூன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!