சீரியலில் இருந்து விலகிய நடிகை கவிதா… கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு

சென்னை:
கன்னட பிக்பாஸில் பங்கேற்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி உள்ளார் நடிகை கவிதா.

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது அண்ணன் தம்பி மற்றும் அவர்களின் மனைவிகளை சுற்றிய கதை. புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் பல பிரபலங்கள் தான் நடிக்கின்றனர்.

சீரியல் ஆரம்பத்தில் நடிகை கவிதா சீரியலில் நடித்திருப்பதாக காட்டினர். ஆனால் இப்போது அவருக்கும் பதிலாக வேறொரு நடிகை நடிக்கிறார். காரணம் கவிதா கன்னடத்தில் தொடங்க இருக்கும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

அதனால் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறேன். மற்றொரு புதிய தமிழ் சீரியலில் பிறகு என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!