சுஜா சிவகுமார் திருமணம் விரைவில்

சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களிலும், ஒரு பாட்டுக்கும் ஆடி வந்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரும், மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வருகிற நவ., 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. திரைப்பிரபலங்களை அழைக்கும் விதமாக அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர் சுஜா – சிவகுமார். அந்தவகையில், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

இதுப்பற்றி சுஜா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே கமலிடம், என் தந்தை இடத்தில் இருந்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும், சம்மதம் சொன்னார். அதன்படி என் திருமணத்தை நடத்தி வைப்பதாக கமல் சொல்லியிருக்கிறார் என்கிறார்

Sharing is caring!