சுஜா வருணி சிவாஜி தேவ் திருமணம்

பல படங்களில் ஒரு பாடலுக்கும், குணச்சித்ர நடிகையாகவும் நடித்தவர் சுஜா வருணி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரும் நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமார் என்கிற சிவாஜி தேவ்வும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமணம், சென்னை, அடையார் கிரவுன் பிளாசாவில் இன்று(நவ., 19) சிறப்பாக நடந்தது. காலை 10.17 மணியளவில் மணமகள் சுஜா கழுத்தில் தாலி கட்டினார் சிவாஜி தேவ்.

சிவகுமார், எம்எஸ்.பாஸ்கர், ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, லிஸா, சுஹாசினி, ராதிகா சரத்குமார், வடிவுக்கரசி, கணேஷ் வெங்கட்ராம், இயக்குநர் விஷ்ணு வர்தன், அஸ்வின், கணேஷ் வெங்கட்ராமன், லதா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Sharing is caring!