சுந்தர்.சி. இயக்கத்தில் முதன் முதாலாக, சிம்பு

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் முதன் முதாலாக, சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், மஹத், நாசர், பிரபு, ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுமன் வி.டி.வி.கணேஷ் என்று நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய பெரிய படங்கள் வெளியானதால் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் சம்பள பிரச்சனை காரணமாக பாடல் காட்சியில் நடிக்க வராமல் முரண்டு பிடித்தார் சிம்பு. இதன் காரணமாக படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’. மம்முட்டியின் ‘பேரன்பு’ ஆகிய படங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீஸ் தேதி குறித்துள்ளன.

இந்நிலையில் இப்போது சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீஸ் என்று வெளியான தகவல் ஜி.வி.பிரகாஷை அப்செட்டாக்கி உள்ளதாம். ஏற்கனவே பல தடவை சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு பிறகு தள்ளி வைக்கப்பட்டநிலையில், இப்போது மற்ற படங்களினால் மீண்டும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்..

Sharing is caring!