சுப்பர் ஸ்டார் ரஜினி 68ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்

தென்னிந்திய திரையுலகில் நடிகர், சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 68ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகத் திகழ்ந்துவரும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சக நடிகர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நன்றி கமல், என்றென்றும், உங்கள் ரஜினி” என நன்றி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!